லிவர்பூல்: ஆன்ஃபீல்ட் விளையாட்டு அரங்கில் வைத்து லிவர்பூல் காற் பந்துக் குழுவைத் தோற்கடிக்க வேண்டும் எனும் மான்செஸ்டர் சிட்டி குழுவின் ஆசை கடந்த 13 ஆண்டுகளாக நிராசையாகி வருகிறது. கடைசியாக 2003 மே மாதம் லிவர்பூல் குழுவை அதன் சொந்த அரங்கில் வைத்து வீழ்த்தியிருந்தது சிட்டி. நேற்று அதிகாலை அங்கு நடந்த ஆட்டத்திலும் லிவர்பூல் குழுவின் கையே ஓங்கியது. ஆட்டத்தின் எட்டாவது நிமிடத்தில் ஆடம் லலானாவிடம் இருந்து வந்த பந்தைத் தமது தலையால் முட்டி மின்னல் வேகத்தில் வலைக் குள் தள்ளினார் லிவர்பூல் வீரர் ஜார்ஜினியோ வைனால்டம். அதுவே ஆட்டத்தில் விழுந்த ஒரே கோலாக அமைந்து, லிவர்பூல் 1-0 என வெற்றியை ருசிக்க உதவிய
மான்செஸ்டர் சிட்டிக்கு எதிரான ஆட்டத்தில் தலையால் முட்டி கோலடிக்கும் லிவர்பூல் ஆட்டக்காரர் வைனால்டம் (நடுவில்). படம்: ராய்ட்டர்ஸ்