கண்கள் கைபேசியைத் தேடுதே!

காலையில் யார் முகத்தில் விழித்தோம், தொட்டதெல்லாம் பொன் ஆகிறதே என்று மகிழ்ந்த அல்லது எந்தக் காரியமும் கைகூடவில்லையே என்று புலம்பிய காலம் எல்லாம் மலையேறிவிட்டது. இப்போது பெரும்பாலானவர்கள் அப்படி யார் முகத்திலும் விழிப்ப தில்லை. காலையில் கண்விழித் ததும் நம் கண்கள் தேடுவதும் கைகள் துழாவுவதும் திறன்பேசி களைத்தான்! அந்த அளவுக்குத் திறன்பேசிகளோடு வாழ்க்கையில் நாம் ஒன்றிப் போய்விட்டோம். திறன்பேசி வைத்திருப்போரில் 61 விழுக்காட்டினர், அதாவது பத்தில் அறுவருக்கும் சற்று அதிகமானோர் இரவு தூங்கி காலையில் எழுந்ததும் ஐந்து நிமிடங்களுக்குள்ளாகத் தங்களது திறன்பேசியைப் பார்ப்பதை வழக்க மாகக் கொண்டிருக்கின்றனர் என்பது புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அரைமணி நேரத்திற்குள்ளாக என்று வரும்போது இந்த எண் ணிக்கை 88 விழுக்காடாக அதிகரிக்கிறது என்று 'டெலாய்ட் அனைத்துலக கைபேசி வாடிக்கை யாளர் கருத்தாய்வு 2016' முடிவுகள் கூறுகின்றன. சுமார் 96 விழுக்காட்டினர் விழித்தெழுந்து ஒரு மணி நேரத் திற்குள்ளாகத் தங்களது திறன் பேசியைப் பார்த்து விடுகின்றனர். படம்: இணையம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!