ஜேசுதாசுக்கு பாத பூசை செய்த எஸ்.பி.பாலா

பின்னணிப் பாடகர் ஜேசுதாசுக்கு எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாத பூசை செய்திருக்கிறார். இது தனது குருவுக்குத் தான் செலுத்தும் காணிக்கை என எஸ்.பி.பாலா கூறியிருக்கிறார். எஸ்.பி. பாலசுப்பிரமணியம் திரைப்படங்களுக்காகப் பாட ஆரம்பித்து 50 ஆண் டுகள் ஆகின்றன. இதையொட்டி அவர் உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்தார். கனடா, மலேசியா, ரஷ்யா, இலங்கை, துபாய், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அவர் இசை நிகழ்ச்சிகள் நடத்திவிட்டு சென்னை திரும்பியுள்ளார். இதையடுத்து செய்தியாளர் களைச் சந்தித்து சில விஷயங் களைப் பகிர்ந்து கொண்டார்.

அப்போது பின்னணிப் பாடகர் ஜேசுதாசையும் அவரது மனைவி பிரபாவையும் மேடைக்கு அழைத்து அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புவதாகக் கூறினார். இதையடுத்து பாடகர் எஸ்.பி.பாலாவும் அவரது மனைவி சாவித்ரியும் ஜேசுதாசுக்கு பாத பூசை செய்து, அவரது கால்களில் விழுந்து வணங்கினார்கள். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தான் 50 ஆண்டுகள் திரைத்துறையில் இருப்பது ஒன்றும் பெரிய சாதனை அல்ல என்றார் எஸ்.பி.பாலா. "ஜேசுதாஸ் அண்ணா 55 வருடங்களாகப் பாடி வருகிறார். ஜானகி, சுசிலா, லதா மங்கேஷ்கர் போன்றவர்கள் 75 வருடங்களுக்கு மேல் பாடி வருகிறார்கள். "ஜேசுதாஸ் எனது குரு. அவருக்கு காணிக்கை செலுத் தும் விதமாக நான் பாத பூசை செய்தேன். அவர் ஒரு ரி‌ஷி, யோகி. அவரைப் போன்ற ஒரு குரல் கிடைப்பது பூர்வ ஜென்ம புண்ணியம். பூர்வ ஜென்மத்தில் அவர் புண்ணியம் செய்திருக் கிறார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!