தமிழகத்தின் ஆளும் அதிமுக கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள சசிகலா விரைவில் ஆட்சிப் பொறுப்பேற்க வேண்டும் என கட்சியின் கொள்கை பரப்புச் செயலாள ரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை நேற்று கோரிக்கை விடுத்துள்ளார். சசிகலா விரைவில் தமிழக முதல்வராவார் என்று அதிமுக அமைச்சர்கள் ஆர்.பி.உதய குமார், கடம்பூர் ராஜூ, சேவூர் ராமச்சந்திரன் மூவரும் கூறியதை அடுத்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். "ஆட்சித் தலைமை ஒருவரிடமும் கட்சித் தலைமை ஒருவரிடமும் இருப்பது தமிழக மக்களுக்கு உகந்ததாக இல்லை. இரண்டும் ஒன்றாக இருந்தால்தான் ஒருமித்த சிந்தனை யுடன் செயல்பட முடியும்," என்றார் தம்பிதுரை.
ஸ்டாலின் கண்டனம்
இதற்கிடையே தம்பித்துரையின் அறிக்கை யைக் கடுமையாகச் சாடியுள்ள எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் பதவியை அவர் சிறுமைப்படுத்துகிறார் என் றார். ஆளுநர் உடனடியாக முதல்வருக்குள்ள பலத்தை சட்டமன்றத்தில் நிரூபிக்க உத்தர விட வேண்டும் என்றும் அவர் கூறினார். தம்பிதுரை தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இவ்வாறு அறிக்கைகளை வெளியிட வேண்டும் என்றும் அரசியல் சட்டத்திற்கு எதிராகவும் அரசியல் சட்ட நெருக்கடியை ஏற்படுத்தவும் தனது துணை சபாநாயகர் பதவியைப் பயன்படுத்தக்கூடாது என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். இந்நிலையில் போயஸ் தோட்டத்தில் சசிகலாவை முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். சசிகலா முதல்வராக வேண்டும் எனக் கோரிக்கை வலுத்து வருவதால் பன்னீர்செல்வம் தமது பதவி விலகல் குறித்து சசிகலாவுடன் விவா தித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. பன்னீர் செல்வத்துக்கு எதிர்ப்பு வலுத்து வரு வதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.