இந்தியாவில் சாதி, மத அடிப்படையில் வாக்குச் சேகரிக்கத் தடை

தேர்தலின்போது சாதி, மதம், மொழி, இனம், சமூகத்தின் பெயரால் வாக்குகள் கோருவது ஊழல் நடவடிக்கை என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேர்தலின்போது சாதி, மத அடிப்படையில் வாக்குச் சேகரிப்பது தொடர்பாக 1995ஆம் ஆண்டின் உச்ச நீதிமன்ற உத்தரவை மறு பரிசீலனை செய்யக்கோரி மேல் முறையீடு செய்யப்பட்டது. 1995ல் நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையிலான அமர்வு "இந்து மதம் என்பது இந்தியத் துணைக் கண்டத்தில் வசிக்கும் மக்களின் வாழ்வியல் முறையாகும். ஒரு வேட்பாளர் அதைச் சார்ந்ததாக இருப்பதால் மட்டுமே தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது," என்று தீர்ப்பளித்தது. அந்த மேல்முறையீட்டு மனுவை தலைமை நீதிபதி தாக்கூர் தலை மையில் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று விசாரித்தது. தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், நீதிபதிகள் லோகுர், பாப்டி, எல்.என்.ராவ் ஆகிய நால்வரும் அரசியலில் மதம் கலக்கக்கூடாது என்றனர். மற்ற மூன்று நீதிபதி களான ஏ.கே.கோயல், யூ.யூ.லலித், சந்திரசூட் ஆகியோர் மாறுபட்ட கருத்துகளைக் கூறினர். பெரும்பாலான நீதிபதிகள் ஆதரவு காரணமாக சாதி, மத, மொழி, இனம், சமூக அடிப்படை யில் வாக்குச் சேகரிப்பது தேர்தல் விதிகளின்படி குற்றமே என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வெளி யிட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!