மரீனா பே கேளிக்கை முடிந்து துப்புரவுப் பணி

புத்தாண்டு பிறப்பைக் கொண் டாடும் வகையில் மரீனா பே பகுதியில் நகரச் சீரமைப்பு ஆணையமும் தி எஸ்பிளனெட் தியேட்டர்ஸ் ஆன் தி வே நிறு வனமும் ஏற்பாடு செய்த வாண வேடிக்கை கேளிக்கை நிகழ்ச்சி யில் சுமார் 300,000 பேர் கலந்து கொண்டு மகிழ்ந்தார்கள். இந்த வாணவேடிக்கை நிகழ்ச்சி சில நிமிடங்களுக்குத் தான் நீடித்தது என்றாலும் புத் தாண்டுக் கொண்டாட்டம் முடிந்த தும் அந்த வட்டாரத்தைத் தூய் மைப்படுத்த பல மணி நேரம் போராட வேண்டியிருந்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் 300 ஊழியர்களை வேலையில் அமர்த்தி துப்புரவுப் பணியை மேற்கொண்டனர். இந்தக் காரியம் முடிய பொழுதுவிடிந்துவிட்டது. சிங்கப்பூர் மண்டரின் அரிமா சங்கத்தைச் சேர்ந்த சுமார் 260 தொண்டூழியர்களும் துப்புரவுப் பணியில் உதவினார்கள்.

மரீனா பே கேளிக்கை முடிந்து எஸ்பிளனெட் வாட்டர்ஃபிரண்டில் துப்புரவு வேலை நடக்கிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!