தமிழ்ப் படங்களில் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார். நகைச்சுவை மற்றும் திகில் காட்சிகள் கலந்த படமாக உருவாகியிருக்கும் 'மோ' படத்தின் நாயகி இவர்தான். இது ஐஸ்வர்யா ராஜேஸ் நடிப்பில் வெளியான எட்டாவது படம். ஒரே ஆண்டில் இத்தனை படங்களா?
"நான் எதையுமே திட்டமிட்டுச் செய்வதில்லை. சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும் அது வலுவான, ரசிகர்கள் மனதில் பதியும் கதாபாத்திரமாக இருக்குமா என்றுதான் பார்க்கிறேன். அதுதான் எனக்கு முக்கியம். எத்தனை படங்கள் என்ற எண்ணிக்கையில் எனக்கு நம்பிக்கை இல்லை.