நயன்தாரா, திரிஷா, கரீனா கபூர் போன்று திறமையான நடிகைகளால்தான் திரையுலகில் நிலைத்திருக்க முடியும் என்று தமன்னா கூறியுள்ளார்.
அண்மையில் ஹைதராபாத்தில் செய்தியா ளர்களைச் சந்தித்துப் பேசினார் தமன்னா. அப்போது தனது வெற்றி ரகசியங்கள் மட்டுமின்றி, அழகு ரகசியங்களையும் வெளிப் படையாகப் பகிர்ந்துகொண்டார்.
"எனது கட்டுக்கோப்பான உடல் அழகு தான் எனக்குப் பலம். திரைப்படங்களில் அறிமுகமானதில் இருந்து ஒரே மாதிரி தோற்றத்தில் இருக்கிறீர்களே, இதற்கு என்ன சாப்பிடுகிறீர்கள்? என்று பலரும் என்னைக் கேட்கிறார்கள்.