பிரேசிலியா: பிரேசிலின் அமேசான் காட்டுப் பகுதியில் உள்ள மனாவுஸ் என்ற நகரின் சிறைச்சாலையில் திங்கட் கிழமையன்று சாவ் பாலோ நகரத்தை மையமாகக் கொண்ட ஃபர்ஸ்ட் கேப்பிட்டல் கமாண்ட் என்ற போதைப் பெருள் கும்பலுக் கும் மனாவுஸ் நகரை மையமாகக் கொண்ட மற்றொரு கும்பலுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் கிட்டத்தட்ட 60 பேர் உயிரிழந்த தாகக் கூறப்படுகிறது. "போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக நடைபெற்றுவரும் கொடூரமான போரில் இது மற்றோர் அத்தியாயம்," என்று அமேசோனாஸ் மாநில பாதுகாப்பு படையின் தலைவரான செர்ஜியோ ஃபாண்டெஸ் கூறினார்.
பிரேசிலின் அமேசான் காட்டுப் பகுதியில் உள்ள மனாவுஸ் நகரில் இரு போதைப் பொருள் கடத்தல் கும்பல்களுக்கிடையே திங்கட்கிழமை ஏற்பட்ட மோதலில் சுமார் 60 பேர் உயிரிழந்தனர். இதில் பலரின் தலை துண்டிக்கப்பட்டு சிறைக் கதவுகளுக்கு வெளியே வீசி எறியப்பட்டதாக செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த சிறைவாசலுக்கு அருகிலுள்ள சோதனைச் சாவடியில் கைதிகளின் உறவினர்கள் கதறி அழுகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்