தமிழ்ப் பள்ளியில் மலாய் மாணவர்

பாகோ: மலேசியாவில் நேற்று பள்ளிக்கூடங்கள் திறக்கப் பட்டபோது பாகோவில் உள்ள ஒரு தமிழ்ப் பள்ளியில் தொடக்கநிலை ஒன்றாம் வகுப்பில் ஒரே ஒரு மாணவர் மட்டுமே சேர்ந்தார். அவரும் மலாய் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. லாடாங் பான் ஹெங் தமிழ்த் தொடக்கப் பள்ளியில் பயிலும் ஐந்து மலாய் மாணவர்களில் முகம்மது ஹாரிஸ் அசிராஃபும் ஒருவர். அந்தப் பள்ளியில் மொத்தமே 11 மாணவர்கள்தான் பயில்கிறார்கள். அவர்களுக்கு 11 ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்கின்றனர். முகமது ஹாரிஸ் தொடக்கநிலை ஒன்றில் சேர ஆர்வமாய் இருந்ததாகக் கூறுகிறார் அவரது தாயார் நோரிலாம் அப்துல் அசிசி.

ஹாரிசின் 10 வயது சகோதரியும் 12 வயது அண்ணனும் இதே பள்ளியில் பயில்கின்றனர். "உயர்நிலைப் பள்ளியில் தற்போது பயிலும் எனது மூத்த மகனும் இதே தொடக்கப் பள்ளியில்தான் படித்தான்," என்று மேலும் கூறிய அவர், "எங்கள் பிள்ளைகள் புதிய மொழியைக் கற்றுக்கொள்வதை நாங்கள் விரும்புகிறோம். "அவர்களுக்குத் தமிழ் பேசத் தெரியும் என்பது எங்களுக்குப் பெருமையாக உள்ளது," என்றும் சொன்னார். வீட்டில் எல்லா பிள்ளைகளும் தமிழில் பேசுவது தனக்கு ஒரு பிரச்சினையல்ல என்றும் செம்பனைத் தோட்டத்தில் வசிக்கும் தாங்கள் அனைத்து இனத்தவருடனும் நெருங்கிப் பழகுவதாகவும் அவர் கூறினார். ஆசிரியர் சங்கத்தின் தலைவர் திரு அ. சுப்பிரமணியம் இரண்டு மலாய்க் குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளை அப்பள்ளிக்கு அனுப்பி வைப்பதாகத் தெரிவித்தார்.

தமிழ்ப் பள்ளியில் பயிலும் தமது மகன் முகம்மது ஹாரிசின் கழுத்துப் பட்டையை சரி செய்கிறார் தாயார். முகம்மது ஹாரிசின் சகோதரரான முகம்மது ரட்சிஃப் அய்மானும் அவரது சகோதரி நுருல் அட்ரியான் சியஃபிகாவும் இதே பள்ளியில்தான் பயின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. படம்: தி ஸ்டார்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!