இஸ்தான்புல்: துருக்கியின் இஸ்தான்புல் நகரில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது அங் குள்ள பிரபல இரவு விடுதியின் மீது நடந்த தாக்குதலுக்கு காரண மான முக்கிய சந்தேகப் பேர்வழி யின் புகைப்படத்தை அந்நாட்டு அதி காரிகள் வெளியிட்டுள்ளனர். அந்தப் படம் கண்காணிப்பு கேமரா வின் மூலம் கிடைக்கப் பெற்றதாக அறியப்படுகிறது. அந்த சந்தேகப் பேர்வழியின் கைவிரல் ரேகைகள், அவனைப் பற்றிய மற்ற தகவல்கள் ஆகியவற்றை சேகரித்த நிலையில் அவனைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு அரசாங்கப் பேச்சாளரான நுமன் குர்டுல்மஸ் கூறியுள்ளார்.
துருக்கியில் நடந்த இந்த பயங் கரவாதத் தாக்குதலுக்கு பொறுப் பேற்றுள்ள ஐஎஸ் பயங்கரவாத இயக்கம், இந்தத் தாக்குதல் சிரியாவில் துருக்கியின் ராணுவ ஈடுபாட்டுக்கு பழிதீர்க்கும் செயல் என்று கூறியுள்ளது. "சமய நம்பிக்கைகளை கை விட்ட துருக்கிய அரசாங்கம் சிரியாவில் மேற்கொள்ளும் விமான, பீரங்கித் தாக்குதல் களால் தங்கள் சொந்த நாட்டிலும் தீப்பற்றி எரியக்கூடும் என்பதை உணர வேண்டும்," என்று ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் தனது அறிக்கையில் தெரிவித்தது.
இஸ்தான்புல்லில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி 39 பேர் இறக்கவும் மேலும் பலர் படுகாயமடையவும் காரணமான முக்கிய சந்தேகப் பேர்வழி இவன்தான். படம்: ஏஎஃப்பி