சிட்னி: கிரிக்கெட்டின் பிதா மகனாகக் கருதப்படும் டான் பிராட்மேனுக்குப் பிறகு, டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் முதல் ஆட்டவேளையிலேயே சதமடித்த முதல் ஆஸ்திரேலியர் என்ற பெருமையைத் தன்வசம் ஆக்கினார் அதிரடிப் பந்தடிப் புக்குப் பெயர் போன தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர். அத்துடன், விக்டர் டிரம்ப்பர், சார்ல்ஸ் மெக்கார்ட்னி, டான் பிராட்மேன், மஜித் கான் ஆகி யோர் வரிசையில் முதல் ஆட்ட வேளையிலேயே சதமடித்த 5வது வீரராகத் தன் பெயரை அவர் இணைத்துக்கொண்டார். பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என ஆஸ்திரேலிய அணி ஏற்கெ னவே வென்றுவிட்ட நிலையில், மூன்றாவது, கடைசி டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்று முதலில் பந்தடித்த ஆஸ்திரேலிய அணியின் ஓட்ட எண்ணிக்கை வார்னரின் அபார பந்தடிப்பால் மளமளவென உயர்ந்தது.
டெஸ்ட் போட்டியின் முதல் ஆட்டவேளையிலேயே சதமடித்து சாதனை படைத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர். படம்: ராய்ட்டர்ஸ்