விடைபெறும் தருணத்தை நெருங்குகிறேன் - பெப் கார்டியோலா

மான்செஸ்டர்: உலகின் சிறந்த காற்பந்து நிர்வாகிகளில் ஒருவராகக் கருதப்படுபவர் மான் செஸ்டர் சிட்டி குழுவின் இப்போதைய நிர்வாகியான பெப் கார்டியோலா, 45 (படம்). ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இவர் பார்சிலோனா, பயர்ன் மியூனிக் ஆகிய முன்னணிக் குழுக் களை வெற்றிகரமாக வழிநடத்தி விட்டு, இங்கிலிஷ் பிரிமியர் லீக் கிலும் சாதிக்கும் நோக்கில் இந்தப் பருவத்தின் தொடக்கத்தில் சிட்டி குழுவின் நிர்வாகி பொறுப்பை ஏற்றார். ஆயினும், இந்தப் பருவத் தில் இதுவரை சிட்டியின் செயல் பாடு இவர் எதிர்பார்த்ததுபோல் அமையவில்லை.

இந்த நிலையில், ஒரு காற் பந்துப் பயிற்றுவிப்பாளராக தமது வாழ்க்கை முடிவை நெருங்குகிறது என்று பெப் கூறியிருக்கிறார். "இன்னும் மூன்று பருவங் களுக்கு நான் மான்செஸ்டர் சிட்டி யுடன் இருக்கவேண்டும். அது இன்னும் நீளக்கூடும். ஆனால், என்னுடைய பயிற்றுவிப்பு வாழ்க்கை யின் இறுதியை நான் நெருங்கு கிறேன் என்பது மட்டும் உறுதி," என்றார் அவர். 60, 65 வயது வரை காற்பந்து நிர்வாகியாக எல்லைக்கோட்டின் அருகே நிற்கமாட் டேன் என்றும் விடை பெறுவதற்கான செயல் முறை ஏற்கெனவே தொடங்கிவிட்டது என்றும் இவர் தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!