திருப்பதியில் வேஷ்டியுடன் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழிபட்டார். அப்போது அவர் வழக்கமான ஆடைகள் அணியாமல் பாரம்பரிய முறைப்படி வேஷ்டியும் மேல் துண்டும் அணிந்திருந்தார். வழிபாட்டிற்குப் பின் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பிரதமருக்குப் பாரம்பரிய முறைப்படி மரியாதைகள் செய்யப்பட்டன. முன்னதாக திருப்பதியில் இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பிரதமரின் வருகையை ஒட்டி திருமலை, திருப்பதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 104வது தேசிய அறிவியல் மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய மோடி, 2030ம் ஆண்டில் அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் 3 நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும் என்றார். இதற்காகப் புதிது புதிதாக அறிமுகமாகி வரும் தொழில் நுட்பங்களின் பலன்களை நாட்டின் வளர்ச்சிக்குப் படிக்கட்டாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனப் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். படம்: ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!