விசாரணை வளையத்துக்குள் பாலியல் தொல்லை விவகாரம்

பெங்களூரு: புத்தாண்டு கொண் டாட்டத்தில் பெருமளவிலான பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் காரணமாக பாதுகாப்பு புகைப்படக் கருவியில் பதிவான விவரங்களைச் சோதித்துப் பார்க்கும் வேலையில் இறங்க உள்ளனர் பெங்களூரு போலிசார். "பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்," என மாநில மகளிர் ஆணையத் தலைவி மாநகர காவல்துறை ஆணையருக்குக் கடிதம் எழுதி யதன் காரணமாகப் போலிசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். முதற்கட்டமாக கண்காணிப்பு புகைப்படக் கருவிகளை ஆய்வு செய்து பெண்களிடம் தவறாக நடந்தவர்களைக் கண்டறிய போலிசார் முடிவு செய்து இருப்ப தாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பாலியல் தொல்லை சம்பவத்திற்கு மேற் கத்திய உடைகள்தான் காரணம் என்று அம்மாநில உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா இளை யர்களைக் குற்றம் சாட்டி உள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்துப் பேசிய பரமேஸ்வரா, "பெண்கள் மேற்கத்திய கலாசாரத்தைப் பெரிதும் விரும்புகிறார்கள். அவர்கள் மேற்கத்திய நாடுகளின் மனப்போக்கை மட்டும் எடுத்துக் கொள்ளவில்லை, அவர்களுடைய ஆடை முறைகளையும் ஏற்றுக் கொண்டு உள்ளனர். எனவேதான் அவ்வப்போது சில துரதிருஷ்ட சம்பவங்களும் நடைபெறுகின்றன. சில பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகிறார்கள்," என்று கூறியுள்ளார். உள்துறை அமைச் சரின் இப்பேச்சானது மக்கள் மத்தியில் கோபத்தை மேலும் அதிகரித்துள்ளது.

பெங்களூருவில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் பெருமளவில் பாலியல் தொல்லை சம்பவங்கள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!