சென்னை: அதிமுக பொதுச் செய லாளர் பதவியைப் பிடித்துவிட்ட வி.கே.சசிகலா அடுத்தகட்ட முயற் சியாக முதல்வர் பதவியை அடை வதற்கான ஒத்திகைகளில் இறங்கி உள்ளார். இன்று முதல் வரும் திங்கட்கிழமை வரை மாவட்ட வாரி யாக அதிமுகவினரைச் சந்திக்க உள்ளார் அவர். கட்சிக் தலைமை யகத்தில் ஒவ்வொரு மாவட்ட நிர் வாகிகளிடமும் பத்து நிமிடம் பேசும் அவர் முதல்வர் பதவிக்கு எதிர்ப்பு இருக்கிறதா என்பதை அறியவிருக்கிறாராம். முதல்வர் பதவியில் அமர்வது குறித்து நேற்று முன்தினம் போயஸ் தோட்ட இல்லத்தில் முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட நிர் வாகிகளிடம் சசிகலா ஆலோசனை நடத்தி இருக்கிறார்.
"முதல்வர் பதவிக்கு நீங்கள் வருவதுதான் எனக்கு மகிழ்ச்சி," என்று சசி கலாவிடம் அந்தப் பதவியில் இருக்கும் ஓ.பி.எஸ். தெரிவித் திருக்கிறார். இந்நிலையில், ஜெயலலிதா வகித்த முதல்வர் பதவியை சசி கலா அடையத் துடிப்பதா என்று சமூக ஊடகங்களில் கொதிப்பான கருத்துகள் வலம் வருகின்றன. இது தொடர்பான ஏராளமான 'மீம்ஸ்'களும் விமர்சனங்களும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர் தல் நடத்துங்கள் என்றும் ஒரு சாரார் கருத்து தெரிவித்துள்ளனர்.
எதிர்ப்பை அறிவதற்காக மாவட்ட நிர்வாகிகளைச் சந்திக்க இருக்கும் சசிகலா. படம்: தமிழக ஊடகம்