சுதாஸகி ராமன்
சிறுவர் புற்றுநோய் அறநிறுவனத் தில் தொண்டூழியம் செய்தபோது அந்நோயால் அவதியுறும் சிறுவர் களின் வேதனைகள், போராட்டங் களை நேரடியாகக் கண்டு அவர்களுக்குத் தம்மால் ஆன உதவியைச் செய்ய வேண்டும் என்று முடிவுசெய்தார் ஓர் இளைஞர். அண்மையில் அமெரிக்காவின் 'பசிபிக் கிரெஸ்ட் டிரெய்ல்' பகுதியில் 'டிரக்இன்விக்டா' என்ற நீண்ட தூர நடைப்பயணத்தை மேற்கொண்டு அதன்வழியாக மழையிலும் புயலிலும் மனந்தளரா சாதனை சிறுவர் புற்றுநோய் அறநிறுவனத் திற்கு நிதி திரட்டியுள்ளார் பிரசாட் ஆறுமுகம், 26.
கனடாவுடனான அமெரிக்கா வின் எல்லையில் தொடங்கிய இப்பயணம் வாஷிங்டன், ஒரிகன், கலிஃபோர்னியா என்ற மூன்று மாநிலங்களில் தொடர்ந்தது. சுமார் 4,280 கி.மீ. தொலைவைத் தனியாக நடந்து மெக்சிகோ- அமெரிக்கா எல்லையை அவர் அடைந்தார். இப்பயணத்தை நான்கு மாதங்களுக்குள் முடித்து விடலாம் என்று எண்ணிய பிரசாட்டுக்கு, வானிலை கை கொடுக்கவில்லை. பயணத்தின் போது திடீரென்று பெய்த மழை, பனி, புயல் போன்றவற்றால் சில சமயங்களில் பயணத்தை நிறுத்த வேண்டியிருந்தது. "புயலில் நடப்பதை தவிர்க்க அருகிலிருந்த சிறிய நகரங்களில் ஒதுங்கினேன். மழை, பனி போன்ற வானிலை மாற்றங்களால் திட்ட மிட்டதற்கு மாறாக நடைப் பயணத்தை முடிக்க ஐந்து மாதங் களானது," என்றார் அவர்.