மனம் வருந்துகிறார் சூர்யா

இயக்குநர் கவுதம் மேனனுக்கு எதிராகத் தான் அறிக்கை வெளியிட்டிருக்கக் கூடாது என சூர்யா தெரிவித்துள்ளார். இயக்குநர் கவுதம் மேனன், நடிகர் சூர்யா இருவரும் இணைந்து 'காக்க காக்க', 'வார ணம் ஆயிரம்' ஆகிய படங்களில் பணியாற்றி யுள்ளனர். இரண்டுமே பெரும் வரவேற்பு பெற்ற படங்கள். மீண்டும் இக்கூட்டணி 'துருவ நட்சத்திரம்' படத்தில் இணைந்து, அதற்கான பூசையும் நடைபெற்றது. ஆனால் சில நாட்களில் அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இப்படம் கைவிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். திரையுலகில் மட்டுமின்றி சமூக வலைத்தளங்களிலும் சூர்யாவின் அறிக்கை விவாதப் பொருளானது. மீண்டும் சூர்யா, கவுதம் மேனன் இருவரும் இணைந்து பணியாற்ற வாய்ப்பில்லை என்று தகவல் வெளியானது. ஆனால் நீண்ட நாட்க ளுக்குப் பிறகு தற்போது இருவரும் சமாதான மாகி இப்புத்தாண்டில் ஒன்றாகப் பணியாற்ற இருப்பதாகக் கூறப்படுகிறது.

அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கவுதம் மேனனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு குறித்து சூர்யாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த சூர்யா, தாம் இயக்குநர் கவுதம் மேனனுக்கு நிச்சயமாக நன்றிக்கடன் பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். "எனது திரையுலகில் 'காக்க காக்க' படம் புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. பிறகு 'வாரணம் ஆயிரம்' பற்றி இன்று வரையும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மறுபடியும் அவ்வளவு சீக்கிரமாக அப்படியொரு படம் செய்ய முடியுமா எனத் தெரியவில்லை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!