நட்புக்காக பட வாய்ப்பை உதறிய காஜல்

விஜய் நடித்த 'கத்தி' படம் தற்போது தெலுங்கில், 'கைதி எண் 150' என்ற தலைப்பில் உருவாகி உள்ளது. இதன் இயக்குநர் விநாயக். சிரஞ்சீவி தான் நாயகன். அவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் காஜல் அகர்வால். இப்படத்தில் ராய்லட்சுமி ஒரு பாட்டுக்கு நடனமாடி இருக்கிறார். வருகிற 13ஆம் தேதி பொங்கல் பண்டிகையை ஒட்டி இப்படம் வெளியாகிறது. "இப்படத்தில் சிரஞ்சீவி ஜோடியாக நடிக்க அனுஷ்காதான் முதலில் தேர்வு செய்யப்பட்டார். அவர் 'பாகுபலி 2' படத்தில் நடித்துக் கொண்டிருப்பதால் இதில் நடிக்க முடியவில்லை. "இதன்பிறகு காஜல் அகர்வாலை அணுகினோம். அவரும் வேறு படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டிருந்தார். எனவே முதலில் தயங்கினார்.

இப்படத்தின் தயாரிப்பாளர் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண். அவர் காஜலின் நண்பர். ராம்சரண் காஜலை தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டதால் அவரது நட்புக்கு மதிப்பு கொடுத்து காஜல் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். "சிரஞ்சீவியுடன் நடிப்பதற்காக காஜல் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட ஒரு படத்தில் இருந்து விலகிவிட்டார் என்பது பெரிய விஷயம். சிரஞ்சீவிக்கு வயது 61. காஜலின் அப்பா வயது. என்றாலும் சிரஞ்சீவியின் ஸ்டைலும் அழகும் அப்படியே இருக்கிறது," என்று இயக்குநர் விநாயக் கூறுகிறார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!