டிரம்ப்பிற்கு எதிராக ஜனவரி 21ல் மாபெரும் மகளிர் ஊர்வலம்

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவுள்ள டோனல்ட் டிரம்ப்பிற்கு எதிராக வரும் ஜனவரி 21ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள மகளிர் ஊர்வலத்தில் பங்கேற்க 100,000க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர். அமெரிக்கத் தேர்தல் முடிவு தெரிந்த பின்னர் புதிய அதிபரின் பதவி ஏற்பு நாளன்று வா‌ஷிங்டனில் பெண்கள் அணிவகுத்துச் சென்றால் என்ன நடக்கும் என்ற கேள்வியை ஓய்வு பெற்ற அரசாங்க தலைமைச் சட்ட அதிகாரியான திருவாட்டி திரேசா சூக் ஃபேஸ்புக் பக்கத்தில் கேட்டிருந்தார். மகளிர் ஊர்வலத்தில் கலந்துகொள்ள தற்போது ஆயிரக்கணக்கானோர் முன்வந்துள்ளனர். திரு டோனல்ட் டிரம்ப்பின் பதவி ஏற்பு தொடர்பாக திட்டமிடப்பட்டுள்ள அந்த மாபெரும் ஊர்வலத்திற்கு 200,000 பேரை ஈர்க்க திட்டமிட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!