கப்பல்கள் மோதல்: புலாவ் உபின் வரை எண்ணெய்க் கசிவு

மலேசியாவின் ஜோகூர் பாருவில் உள்ள துறைமுகத்துக்கு அருகே நேற்று முன்தினம் இரண்டு கொள்கலன் கப்பல்கள் மோதிக் கொண்டன. கப்பல்களில் ஒன்று சிங்கப்பூரில் பதிவான 'வான் ஹாய் 301' எனும் கப்பல். மற்றொன்று ஜிப்ரால்டர் நாட்டில் பதிவான 'ஏபிஎல் டென்வர்' எனும் கப்பல். இரு கப்பல்களும் மோதிக் கொண்டதில் 'ஏபிஎல் டென்வர்' கப்பலில் சேதம் ஏற்பட்டு கிட்டத்தட்ட 300 டன் எண்ணெய் கடலில் கசிந்துள்ளது.

இந்தத் தகவல்களைச் சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. இரு கப்பல்களும் நேற்று முன் தினம் இரவு 11.50 மணிக்கு ஜோகூர் கப்பல் துறைமுகத்துக்கு அருகே மோதிக்கொண்டன என ஜோகூர் துறைமுக ஆணையம் சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணைத்திற்குத் தகவல் தெரிவித் துள்ளது. கப்பல்கள் மோதியதில் இதுவரை யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப் படவில்லை.

எண்ணெய்க் கசிவு செயல்குழுவின் ஒரு படகு கடலில் எண்ணெய்க் கசிவைக் கட்டுப்படுத்தும் மிதவைகளை புலாவ் உபின் அருகே பயன்படுத்துகிறது.

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!