காற்பந்து: ஹல் சிட்டி நிர்வாகி நீக்கம்

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்துள்ளதால் 'ரெலிகேஷன்' நிலையிலிருந்து மீண்டு, அடுத்த பருவத்தில் தொடர முடியுமா என்று அல்லாடிக்கொண்டிருக் கிறது ஹல் சிட்டி காற்பந்துக் குழு. எப்படியேனும் மீண்டெழ வேண்டும் என்ற முனைப்பில் உள்ள அக்குழு, அதற்கு முதல் படியாக நிர்வாகிப் பதவியிலிருந்து மைக் ஃபீலனை நீக்கியுள்ளது. கடந்த அக்டோபரில்தான் 54 வயது ஃபீலன் அக்குழுவின் நிர்வாகியாக ஒப்பந்தம் செய்யப் பட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நடந்த ஆட்டத்தில் வெஸ்ட் புரோம்விச் குழுவிடம் 3-1 என்ற கோல் கணக்கில் அக்குழு தோற்றதை அடுத்து, 19ஆம் நிலையிலிருந்து 20ஆம் நிலைக்குத் தள்ளப்பட்டது. இதுவரை 20 ஆட்டங்கள் முடிந் துள்ள நிலையில் மூன்று ஆட்டங் களில் மட்டும் வென்று 13 புள்ளி களுடன் உள்ளது ஹல் சிட்டி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!