சிறந்த நீச்சல் பட்டியலில் ஸ்கூலிங்கின் சாதனை

ரியோ டி ஜெனிரோவில் கடந்த ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டி களில் 100 மீட்டர் வண்ணத்துப் பூச்சி பாணி நீச்சலில் முதலா வதாக வந்து, ஒலிம்பிக் வரலாற் றில் சிங்கப்பூருக்கு முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார் நீச்சல் வீரர் ஜோசஃப் ஸ்கூலிங். அவரது இந்த மகத்தான சாதனை, பிரபல 'ஸ்விம் ஸ்வேம்' நீச்சல் சஞ்சிகையின் 2016ஆம் ஆண்டுக்கான 'சிறந்த பத்து நீச்சல்' பட்டியலில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஹங்கேரியின் கட்டின்கா ஹோஸு (400 மீ., ரியோ ஒலிம் பிக்), அமெரிக்காவின் கேத்தி லிடெக்கி (100 மீ. மல்லாந்து நீச்சல், ரியோ), பிரிட்டனின் ஆடம் பீட்டி (100 மீ. நெஞ்சுநீச்சல், ரியோ) ஆகியோருக்கு அடுத்த படியாக நான்காமிடம் பிடித்தார் ஸ்கூலிங்.

மைக்கல் ஃபெல்ப்ஸ், சாட் லி குளோஸ் உள்ளிட்ட நீச்சல் ஜாம்பவான்களைப் பின்னுக்குத் தள்ளி ரியோ ஒலிம்பிக்கில் சிங்கப்பூருக்கு முதல் தங்கத்தைப் பெற்றுத் தந்த ஜோசஃப் ஸ்கூலிங், 21. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!