சிங்கப்பூர் ஆயுதப் படையின் ஒன் பது டெரக்ஸ் கவச வாகனங்கள் ஹாங்காங் துறைமுகத்தால் தடுத்து வைக்கப்பட்ட விவகாரத் தில் பொறுமையும் ஒற்றுமையும் காக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு அரசதந்திர வழிமுறை களைக் கையாளத் தேவையில்லை என்றும் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டு உள்ளார். இந்த விவகாரம் சட்ட ரீதியா கக் கையாளப்படுவதுதான் சிறந் தது என்று நேற்று நாடாளுமன்றத் தில் கூறிய அமைச்சர் விவியன், இதனை அரசியலாக்குவது தேவை யில்லாதது என்றும் பொறுமை காத்து, தகுந்த சட்ட நடவடிக்கை மூலம் இந்த விவகாரம் தீர்வு காண்பதற்கு நேரம் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார். டெரக்ஸ் விவகாரம் குறித்து பல நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் விவி யன் பதிலளித்தார்.
மேலும் மற்ற நாடுகள் சிங்கப்பூ ருக்கு நெருக்கடி கொடுத்தாலும் சிங்கப்பூர் தனது வெளியுறவு கொள்கைகளை இறையாண்மை கொண்ட சுதந்திர நாடாகக் கையாள வேண்டும் என்று அமைச் சர் அறிவுறுத்தினார். "மற்ற நாடுகள் தங்களது தேசிய நலனுக்காக மட்டுமே செயல்படவேண்டும் என்று சில நாடுகள் விரும்புவது இயற்கை தான். ஆனால் நாம் நமது வெளி நாட்டுக் கொள்கைகளைச் சுதந்திர நாடாகக் கையாளவேண்டுமே தவிர மற்ற நாடுகளின் வற்புறுத்த லால் நடப்பதாக இருக்கக் கூடாது," என்றார் அமைச்சர். தனது வெளிநாட்டு நண்பர் களுடனும் பங்காளிகளுடனும் சிங்கப்பூர் கொண்டுள்ள அனைத் துலக நம்பகத்தன்மைக்கு இது முக்கியமானது என்றும் அவர் கூறினார். சீன அரசுடன் சிங்கப்பூர் பேச்சு வார்த்தை நடத்தியதா என்றும் இதன் பிறகு சீனாவுடனான சிங்கப்பூரின் அரசதந்திர உறவு எவ்வாறு அமையும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஸாக்கி முகமது கேட்டார்.