மணிலா சமய ஊர்வலத்தில் 1.5 மி. பேர் திரண்டனர்

மணிலா: பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் நேற்றுத் தொடங்கிய சமய ஊர்வலத்தில் 1.5 மில்லி யனுக்கும் மேற்பட்ட கத்தோலிக் கர்கள் கலந்து கொண்டனர். தலைநகர் முழுவதும் தலை களாக தென்பட்டன. ஊர்வலத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் நிலவியதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த சமய ஊர்வலத்தில் சுமார் 400 ஆண்டு கால பழமையான சிலுவையைச் சுமக்கும் கறுப்பு நிற யேசு நாதரின் உருவச்சிலை கொண்டு செல்லப்படுகிறது. ஊர்வலத்தில் ஆயிரக்கணக் கானவர்கள் வெறுங்காலுடன் நடந்து சென்றனர்.

இதில் இரண்டு மில்லியன் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர் பார்க்கப்பட்டது. என்றாலும் 1.5 மில்லியன் பேர் கலந்து கொண் டதாக ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய மணிலாவில் உள்ள கியூரினோ அரங்கத்திலிருந்து சிலுவை ஏந்திய கறுப்பு நிற யேசு நாதர் உருவச் சிலை புறப்பட்டபோது ஊர்வலமும் தொடங்கியது. நகரத்தின் பல சாலைகள் வழியாக சுமார் பத்து கிலோ மீட்டர் தூரம் ஊர்வலம் கடந்து சென்றது. ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் உருவச்சிலையை தொட முயற்சி செய்ததால் நெரிசல் ஏற்பட்டது. சிலர் மற்றவர்கள் மீது ஏறி முன்னேறிச் சென்றனர்.

மணிலாவில் பத்து கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற சமய ஊர்வலத்தில் 1.5 மில்லியன் பேர் பங்கேற்றனர். படம்: ஏஎஃப்பி

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!