‘தர்மதுரை’ குழுவினரைப் பாராட்டிய ரஜினிகாந்த்

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'தர்மதுரை' படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டியுள்ளார் ரஜினிகாந்த். சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா நடிப்பில் வெளியான படம் 'தர்மதுரை'. யுவன் இசையில் வெளியான இப்படத்தை ஆர்.கே.சுரேஷ் தயாரித்திருந்தார். கடந்தாண்டு வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. கடந்த 7ஆம் தேதி அன்று, 'தர்மதுரை' படம் 100வது நாளை எட்டியது. இதைக் கொண்டாட படக்குழுவினர் ரஜினியைச் சந்தித்துப் பேசினர். தயாரிப்பாளர் சுரேஷ், இயக்குநர் சீனு ராமசாமி, விஜய் சேதுபதி ஆகியோர் ரஜினியைச் சந்தித்தார்கள். இந்தக் கலந்துரையாடல் ஒரு மணி நேரம் நடந்தது. அப்போது படத்தின் சிறப்பம்சங்களைக் கூறி படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டினாராம் ரஜினி. இதில் நடித்த நடிகர்களின் இயல்பான நடிப்பு தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் குறிப்பிட்டார். மேலும் சீனு ராமசாமியின் படங்களில் இருக்கும் சமூக அக்கறையுள்ள தன்மைகளையும் குறிப்பிட்டுப் பாராட்டினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!