தலைமைச் சட்ட அதிகாரிக்கு பிரதமர் பாராட்டு

தலைமைச் சட்ட அதிகாரி பதவியி லிருந்து ஓய்வு பெறும் வி.கே. ராஜாவிற்கு பிரதமர் லீ சியன் லூங் அனுப்பிய கடிதத்தில் புகழா ரம் சூட்டியிருக்கிறார். சிங்கப்பூரின் நீதித் துறைக்குச் சேவையாற்று வதில் அவர் முத்திரை பதித்து இருப்பதாக திரு லீ குறிப்பிட்டார். "உங்களுடைய தீர்ப்புகளில் பலவும் சிங்கப்பூரின் சட்ட மேம்பாட் டிற்கு உருகொடுத்துள்ளன," என்று திரு லீ தெரிவித்தார். திரு ராஜா, 2014 நடுப்பகுதி முதல் தலைமைச் சட்ட அதிகாரி யாகப் பணியாற்றி வருகிறார். இவரின் பதவிக்காலம் ஜனவரி 14ஆம் தேதி முடிவடைகிறது.

அப்போது அவருக்கு 60 வயதாகிறது. புதிய தலைமைச் சட்ட அதிகாரி யாக லூசியன் வோங் பதவி ஏற்பார். சிங்கப்பூர்-கோலாலம்பூர் அதிவேக ரயில் திட்டம் தொடர்பில் மலேசியாவுடனான சிங்கப்பூர் பேச்சுவார்த்தைப் பற்றிய சட்டப் பணிகளுக்கு திரு ராஜா உத்தர விட்டார். நடப்பில் உள்ள சட்ட நடைமுறைகளைத் திரு ராஜா மேம்படுத்தி இருக்கிறார். அமைப் பின் ஆற்றலை மேம்படுத்த பல நடவடிக்கைகளை திரு ராஜா அறிமுகப்படுத்தினார். "திரு ராஜாவின் தலைமைத் துவத்தின்கீழ் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம், குறிப்பிடத் தக்க அனைத்துலக உடன்பாடு கள் தொடர்பான வெற்றிகரமான பேச்சுவார்த்தைகளுக்குச் சட்ட ஆதரவை வழங்கி இருக்கிறது. "சட்டத் துறைத் தலைவராக திரு ராஜா ஆற்றியிருக்கும் தொண்டுக்காக அரசாங்கம் அவருக்கு நன்றி கூறுகிறது," என்று திரு லீ குறிப்பிட்டுள்ளார்.

தலைமைச் சட்ட அதிகாரி பதவியிலிருந்து ஓய்வு பெறும் திரு வி.கே. ராஜா. கோப்புப்படம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!