சிங்கப்பூர் ஆயுதப் படைகளின் ஒன்பது டெரக்ஸ் கவச வாகனங் கள் ஹாங்காங்கால் பறிமுதல் செய்யப்பட்டது அனைத்துலகச் சட்டத்துடனும் ஹாங்காங் சட்டத் துடனும் ஒத்துப்போகவில்லை என்றும் சிங்கப்பூர் தனது கவச வாகனங்களைக் விரைவில் திரும்பப்பெறும் என எதிர்பார்ப்ப தாகவும் தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் தெரிவித் துள்ளார். வீரர்களை ஏற்றிச் செல்லும் அந்த டெரக்ஸ் கவச வாகனங் கள் சிங்கப்பூர் அரசாங்கத்தின் சொத்து என்றும் அவை அனைத் துலகச் சட்டத்தால் பாதுகாக்கப் பட்டவை என்றும் அவர் கூறினார். இறையாண்மை நாடு ஒன்றுக்கு இருக்கக்கூடிய சட்டப் பாதுகாப்புநிலை என்ற அடிப்படையில், ஒரு நாட்டின் சொத்துகளைப் பறிமுதல் செய்யவோ எடுத்துக் கொள்ளவோ முடியாது.
இந்தக் கோட்பாடு மிகத் தெளிவாக அனைத்துலகச் சட்டத்திலும் சீனாவின் சிறப்பு நிர்வாக வட் டாரமான ஹாங்காங்கின் சட்டத் திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார். இதன்படி சிங்கப்பூர் அரசாங் கம், சிங்கப்பூர் ஆயுதப் படையின் டெரக்ஸ் வாகனங்கள் மீதான தனது அதிகார உரிமையை வலியுறுத்தி யுள்ளது என்றும் டாக்டர் இங் தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட கவச வாகனங்களின் நிலைகுறித்து திரு விக்ரம் நாயர் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நேற்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார். டெரக்ஸ் கவச வாகனங்கள் சிங்கப்பூருக்குச் சொந்தமா னவை. அவை தடுத்து வைக்கப் படக்கூடாது என்று கடந்த இரண்டு மாதங்களில் ஹாங்காங் கிடம் பலமுறை சிங்கப்பூர் தெரி வித்துள்ளது. மேலும் இப்பிரச் சினை குறித்து பிரதமர் லீ சியன் லூங் ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி லியுங் சுன் யிங்யுடன் எழுத்துபூர்வமாகத் தொடர்பு கொண்டுள்ளார் என்றும் திரு இங் தெரிவித்தார்.
மூடிய நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள டெரக்ஸ் கவச வாகனங்கள். படம்: ஏஎஃப்பி