சசிகலாவுக்கு பாஜக ஆதரவு

ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டு தமிழகத்தின் முதல்வர் பதவியை சசிகலா கைப்பற்றினால், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைக் தன்வசம் கொண்டுவரும் நோக்கத்தில் பாஜக சசிகலாவுடன் கைகோக்கும் என்று கூறப் படுகிறது. அடுத்த சில வாரங்களில் சசி கலா முதல்வராகக் கூடும் எனக் கூறப்படும் நிலையில், அதிமுகவில் சசிகலாவை எதிர்ப் பவர்களை மத்திய அரசு கவனித்து வரு கிறது. சசிகலா முதல்வரானால் கட்சி பிளவுபடக்கூடும் என மத்திய அமைச்சு கருதுகிறது. குறைந்தது 35 அதிமுக எம்எல்ஏக்கள் சட்டமன்றப் பதவி யைத் துறப்பார்கள் என்றும் அதனால் கட்சி பெரும்பான்மையை இழந்துவிடும் அல்லது அவர்கள் திமுகவில் சேரக்கூடும் என்றும் மத்திய அரசுக்கு தகவல் கிடைத் திருப்பதாகத் தமிழகச் செய்திகள் கூறுகின்றன.

இந்நிலையில், ஜூலை- ஆகஸ்ட்டில் இந்திய அதிபர் தேர்தல் முடியும் வரையிலாவது அதிமுகவில் பிளவு ஏற்படாமல் நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் விஜயசாகர் ராவ்விடம் மத்திய அரசு கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிபர், துணை அதிபர் பதவி களில் பாஜக முன்மொழிபவர்கள் இடம்பெற வேண்டுமென அக்கட்சி எதிர்பார்க்கிறது. விரைவில் ஐந்து மாநிலங்களில் நடக்கவுள்ள தேர்தல்களும் பாஜகவுக்கு கவலை யளிப்பதாகவே உள்ளது. நாடாளு மன்றத்தின் இரு அவைகளில் உள்ளவர்களே அதிபர் தேர்தலில் வாக்களிப்பவர்கள் என்பதால் அதிமுகவின் வாக்குகள் பாஜகவுக்கு முக்கியம். அதனால் அக்கட்சி பிளவுபடாமல் இருப்பதில் பாஜக இப்போது அதிக அக்கறை காட்டுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!