தைப்பூசத்தில் பொருத்தமற்ற உடையில் வரும்

பெண்கள் மீது சாயம் தெளிக்க திட்டம் தைப்பூசத்தில் பொருத்த மற்ற உடையணிந்து வரும் இந்துப் பெண்கள் மீது சாயம் தெளிக் கப்படும் என்று மலேசிய ஃபேஸ்புக் குழு ஒன்று எச்சரித்துள்ளது. 'தைப்பூசம் ஸ்பிரேயிங் குருப்' என்ற ஃபேஸ்புக் பக்கத்தை மலேசியாவைச் சேர்ந்த ஹென்ட்ரி பார்னபஸ் என்பவர் உருவாக்கி அதில் இந்துப் பெண்களை எச்சரித்துள்ளார். அந்தப் பக்கத்தில் விதவித வடிவங்களைக் கொண்ட 'டிசைனர்' ரவிக்கைகளின் பின் புறப் படங்கள் இடம் பெற்றுள்ளன. "பொருத்தமில்லாது உடை யணிந்தால் ஸ்பிரே பெயிண்ட் தெளிக்கப்படும், ஜாக்கிரதை" என்று எச்சரிக்கையும் விடுக்கப் பட்டுள்ளது.

அதேநேரரத்தில் மிரட்டல் விடுத்திருப்பவரை மலேசியா போலிசார் தேடி வருகின்றனர். ஃபேஸ்புக்கில் அதிவேகமாகப் பரவி வரும் அந்த அச்சுறுத்தல் குறித்துத் தங்களுக்குத் தெரியும் என்று சிலாங்கூர் போலிஸ் ஆணையர் அப்துல் சாமா மட் கூறினார். "நாங்கள் தகுந்த நடவடிக்கை எடுப்போம். அந்த நபர் சட்ட விரோதமான காரியத்தில் ஈடுபட நினைக்கிறார். அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்," என்றார் அவர். தைப்பூசத்தின்போது பாது காப்புப் பணியில் போலிசார் ஈடு படுவர் என்றும் சட்டத்தை மீறும் நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் எவராக இருந்தாலும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

ஃபேஸ்புக்கில் அந்தப் பக்கத்தை நிறுவியவரையும் போலிசார் தேடி வருவதாக போலிஸ் ஆணையர் கூறினார். அவர் குறித்த தகவல் தெரிந்தவர்களை விவரங்கள் தந்து உதவுமாறு மலேசிய போலிசார் கேட்டுக் கொண் டுள்ளனர். ஹென்ட்ரி பார்னபஸ் தமது சொந்த ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து கண்ணம்மா குழுவில் இடம்பெற்றுள்ள சேலைப் படங் களை மோசமாகச் சாடியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!