கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவல், நாடகமாக சிங்கப்பூருக்கு வருகிறது. கிட்டத்தட்ட 75 கலை ஞர்கள் பங்கேற்கும் இந்த நாட்டிய நாடகம் இவ்வாண்டின் தமிழ் மொழி விழாவில் ஓர் அங்கமாக மேடையேறவிருக்கிறது. நேரடி இசை, நடனம், சண்டைக் காட்சி, கண்கவர் மேடை அமைப்பு, தத்ரூபமான காட்சியமைப்பு, அழகு தமிழில் இனிய பாடல் வரிகள் எனத் தமிழ் ஆர்வலர்களுக்கும் தமிழ் நேசர்களுக்கும் இந்நாடகம் அருவிருந்தாய் அமையும். 1950களில் கல்கி வார இதழில் ஒரு தொடராக மூன்று ஆண்டு களுக்கும் மேலாக வெளிவந்தது 'பொன்னியின் செல்வன்'. அதன் பிறகு இன்றுவரை பல பதிப்புகள் வெளியாகியுள்ளன.
தென்கிழக்காசியா வரை சோழ ஆட்சியை விரிவுபடுத்திய பெரு வேந்தன் ராஜராஜ சோழனின் ஆரம்பகால வாழ்க்கையைக் கூறும் இந்நாவல் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தமிழ் வரலாற்றையும் வாழ்க்கையையும் எடுத்துக்காட்டு கிறது. இன்றும் பிரபலமாக வாசிக்கப் படும் எழுத்தாளர் கல்கி கிருஷ்ண மூர்த்தியின் இந்நாவலை நாடக வடிவமாக்கி சென்னையில் 2014 முதல் மேடையேற்றி, பெரும் வரவேற்பைப் பெற்றது 'எஸ்.எஸ். இன்டர்நேஷனல் லைவ்' நிறுவனம். இதைத் தொடர்ந்து முதன்முறை யாக அனைத்துலக ரீதியில் இதனை சிங்கப்பூரில் வரும் ஏப்ரல் மாதத்தில் மேடையேற்ற இந்நிறு வனமும் உள்ளூர் 'ஆர்ட் காம்பஸ்' நிறுவனமும் முனைந்துள்ளன.
பொன்னியின் செல்வன் நாள்: ஏப்ரல் 28 (இரவு 7 மணி), 29 &30 (மாலை 6 மணி) இடம்: எஸ்பிளனேட் தியேட்டர் நுழைவுச்சீட்டு குறித்த விவரங்களுக்கு www.sistic. com.sg இணையத்தளத்தை நாடலாம்.
ஐந்து தொகுதிகளும் அடங்கிய 'பொன்னியின் செல்வன்' புத்தகத்துடன் வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் ஆர்.ராஜாராம் (வலமிருந்து 2வது), ஆர்ட் காம்பஸ் நிறுவன இயக்குநர் அகிலா ஐயங்கார் (வலது), எஸ்.எஸ்.இன்டர்நேஷனல் லைவ் நிறுவன இயக்குநர்கள் முரளிதரன் (இடது), இளங்கோ குமணன். படம்: எஸ்.எஸ். இன்டர்நேஷனல் லைவ், திமத்தி டேவிட்