மட்ரிட்: நடப்பு ஸ்பானிய லா லீகா வெற்றியாளரான பார்சிலோனா காற்பந்துக் குழு இந்தப் பருவத்தில் சரிவைச் சந்தித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் ஸ்பானிய அரசர் கிண்ண ஆட்டத் தில் அத்லெட்டிக் பில்பாவ் குழு விடம் வீழ்ந்த பார்சிலோனா, நேற்று அதிகாலை நடந்த லா லீகா ஆட்டத்தில் வியாரியாலிடம் 1-1 எனப் போராடிச் சமநிலை கண்டது. ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் 'ஃப்ரீ கிக்' மூலம் அருமையான கோலடித்து அக்குழுவைத் தோல்வி யின் பிடியிலிருந்து விடுவித்தார் நட்சத்திர ஆட்டக்காரர் லயனல் மெஸ்ஸி.
முன்னதாக, பட்டியலின் முதல் இடத்தில் இருக்கும் ரியால் மட்ரிட் குழு, கிரனாடாவை வீழ்த்தியதன் மூலம் தொடர்ந்து 39 ஆட்டங்களில் வென்று பார்சிலோனாவின் சாத னையைச் சமன் செய்திருந்தது. இதனால், நல்லதொரு செயல் பாட்டை வெளிப்படுத்தி வெற்றியை ஈட்டவேண்டிய நெருக்கடி பார்சி லோனாவுக்கு ஏற்பட்டது. முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிய, பிற்பாதியின் நான்காம் நிமிடத்தில் கோலடித்ததன்மூலம் சொந்த அரங்கில் திரண்டிருந்த ரசிகர்களை உற்சாகமடையச் செய் தார் வியாரியால் ஆட்டக்காரர் நிக்கோலா சேன்சன்.
இறுதி நிமிடத்தில் கோலடித்து பார்சிலோனாவைத் தோல்வியிலிருந்து மீட்ட மெஸ்ஸி. படம்: ராய்ட்டர்ஸ்