லண்டன்: எஃப்ஏ கிண்ணத்தின் நான்காம் சுற்றுக்கு செல்சி, டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழுக் கள் முன்னேறின. ஸ்டாம்ஃபோர்ட் பிரிட்ஜ் அரங் கில் நடந்த ஆட்டத்தில் பெட்ரோ ரோட்ரிகுவெஸ் இரு கோல் களையும் மிச்சி பட்சுவாயி, வில்லியன் ஆகியோர் ஆளுக்கு ஒரு கோலையும் அடிக்க, 4-1 என்ற கோல் கணக்கில் பீட்டர் பரோ யுனைடெட் குழுவைப் புரட்டியெடுத்தது செல்சி குழு. முன்னதாக, இங்கிலிஷ் பிரி மியர் லீக்கில் தொடர்ந்து 13 ஆட்டங்களில் வென்ற அக்குழு, கடந்த வார மத்தியில் ஸ்பர்ஸ் குழுவிடம் 2-0 எனத் தோற்றுப் போனது.
இதையடுத்து, குழுவில் ஒன்பது மாற்றங்களைச் செய்து இருந்தார் செல்சி நிர்வாகி அன்டோனியோ கோன்டே. அனுபவத் தற்காப்பு ஆட்டக்கார ரான ஜான் டெரி, கடந்த அக்டோபருக்குப் பிறகு ஆட்டத் தின் தொடக்கத்திலேயே களம் இறங்கியது இதுதான் முதல் முறை. அதேபோல, முழங்காலில் பலத்த காயமடைந்ததை அடுத்து, இன்னொரு தற்காப்பு வீரர் குர்ட் ஸுமா கடந்த 2016 பிப்ரவரி மாதத்திற்குப் பின் நேற்று முன் தினம்தான் போட்டித் திடலில் முதன்முதலாகக் கால்பதித்தார்.
நடுவர் தமக்குச் சிவப்பு அட்டை காட்டியதை நம்ப முடியாத அதிர்ச்சியில் செல்சி ஆட்டக்காரர் ஜான் டெரி. படம்: ஏஎஃப்பி