ஓஸில்: வெங்கர் இருந்தால் ஆர்சனல் குழுவில் நீடிப்பேன்

லண்டன்: அடுத்தடுத்த பருவங் களிலும் ஆர்சனல் காற்பந்துக் குழு நிர்வாகியாக ஆர்சன் வெங்கர் நீடிப்பார் என்று உறுதியளிக்கும் பட்சத்தில் அக்குழுவுடனான ஒப்பந்தத்தை நீட்டிக்கத் தயார் என்று அறிவித்துள்ளார் ஜெர்மனி ஆட் டக்காரர் மெசுட் ஓஸில் (படம்). இப்பருவத்துடன் வெங்கரின் ஒப்பந்தம் முடிவடைகிறது. அது போல, ஆர்சனல் வீரர்கள் ஓஸில், அலெக்சிஸ் சான்செஸ் ஆகியோ ரின் ஒப்பந்தம் இன்னும் 18 மாதங்களில் காலாவதியாகிவிடும். இந்நிலையில், "ஆர்சனலில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது ஒப்பந்தத்தை நீட்டிக்கவும் விரும்புகிறேன். ரசிகர்களும் அதையே விரும்புகின்றனர். இனி முடிவெடுக்க வேண்டியது ஆர் சனல் நிர்வாகம்தான்," என்று கூறியுள்ளார் ஓஸில். நடப்பு இங்கிலிஷ் பிரிமியர் லீக் பருவத்தில் 20 ஆட்டங் கள் முடிந்துள்ள நிலையில் முதலிடத்தில் உள்ள செல்சி யைவிட எட்டுப் புள்ளிகள் குறைவாகப் பெற்று, 41 புள்ளிகளுடன் ஐந்தாம் நிலை யில் இருக்கிறது ஆர்சனல்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!