லண்டன்: இங்கிலிஷ் எஃப்ஏ கிண்ணக் காற்பந்துப் போட்டியின் நான்காவது சுற்றில் எந்தெந்த குழு யாருடன் மோதும் என்பது குறித்து உறுதி செய்யப்பட்டு உள்ளது. நடப்பு வெற்றியாளரான மான் செஸ்டர் யுனைடெட் குழுவும் செல்சி குழுவும் சொந்த விளை யாட்டரங்கத்தில் களமிறங்கு கின்றன. இவ்விரு குழுக்களும் இரண் டாம் நிலை லீக்கில் போட்டியிடும் குழுக்களுடன் மோதுகின்றன. எனவே, யுனைடெட், செல்சி ஆகிய குழுக்களின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இம்மாதம் 27ஆம் தேதி யிலிருந்து 30ஆம் தேதி வரை நான்காவது சுற்று ஆட்டங்கள் நடைபெறும். 2012=2013 ஆம் பருவத்தில் எஃப்ஏ கிண்ணத்தை வென்ற விகன் அட்லெட்டிக் குழுவுடன் ஓல்ட் டிராஃபர்ட் விளையாட் டரங்கத்தில் யுனைடெட் மோது கிறது. ஸ்டாம்ஃபர்ட் பிரிட்ஜ் விளை யாட்டரங்கத்தில் நடைபெற இருக்கும் ஆட்டத்தில் பிரண்ட் ஃபர்ட் குழுவை செல்சி சந்திக் கிறது. இரண்டாவது நிலை லீக் கிலிருந்து மூன்றாவது நிலை லீக்கிற்குத் தள்ளப்படும் அபாயத் தில் விகன் உள்ளது. இரண் டாவது நிலை லீக்கையே சமாளிக்க சிரமப்படும் விகனை யுனைடெட் மிக எளிதாக ஓரங் கட்டி அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதே போல செல்சியும் எவ்விதப் பிரச்சினையுமின்றி பிரண்ட்ஃபர்ட் குழுவை வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, லிவர்பூலின் ஆன்ஃபீல்ட் விளையாட்டரங் கத்தில் அக்குழுவுடன் கோல் ஏதுமின்றி சமநிலை கண்ட பிலைமத், இம்முறை சொந்த விளையாட்டரங்கத்தில் லிவர் பூலுடன் போராட இருக்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் குழு அடுத்த சுற்றில் தனது சொந்த விளையாட் டரங்கத்தில் உல்வ்ஸ் வண்டரஸ் குழுவுடன் மோதும். போல்டனுக்கும் கிறிஸ்டல் பேலஸ் குழுவுக்கும் இடையிலான ஆட்டத்தில் வெற்றி பெறும் குழுவுடன் மான்செஸ்டர் சிட்டி மோதும். இங்கிலிஷ் பிரிமியர் லீக்கின் நடப்பு வெற்றியாளர் லெஸ்டர் சிட்டியுடன் டார்பி கவுண்ட்டி களமிறங்குகிறது.