டிரம்பின் மருமகனுக்கு உயர் பதவி; பலர் அதிருப்தி

வா‌ஷிங்டன்: இம்மாதம் 20ஆம் தேதி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவுள்ள திரு டோனல்ட் டிரம்ப் தனது மருமகன் ஜெரட் குஷ்னரை வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகராக நியமித் துள்ளார். திரு டிரம்ப்பின் மகள் இவான்கா டிரம்பின் கணவரான குஷ்னருக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டிருப்பது குறித்து ஜனநாயகக் கட்சியினர் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். திரு டிரம்ப் அவரது மருமகனுக்கு உயர் பதவி கொடுத்து சலுகை காட்டியிருப்பது குறித்து கவலைப்படுவதாக ஜனநாயகக் கட்சியினர் தெரிவித் துள்ளனர்.

உறவினர்களுக்கு பதவி வழங்கி சலுகை காட்டுவதற்கு எதிரான சட்டங்களையும் மோதல்கள் ஏற்படுவதற்கான சாத்தியங் களையும் சுட்டிக்காட்டி டிரம்ப்பின் இந்த நியமனத்தை அவர் மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்று ஜனநாயகக் கட்சியினர் கேட்டுக் கொண்டனர். இந்நிலையில் திரு குஷ்னரின் வழக்கறிஞர், திரு குஷ்னருக்கு வழங்கப்பட்டுள்ள உயர் பதவி சட்டத்திற்கு புறம்பானது அல்ல என்று கூறியுள்ளார். புதிய பதவி ஏற்பதற்கு முன்னதாக திரு குஷ்னர் குடும்ப சொத்து தொழில் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகு வார் என்று அவரது வழக்கறிஞர் ஜேமி கோர்லிக் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!