பேங்காக்: தாய்லாந்தின் தென் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக முக்கிய இரு பாலங்கள் சேதம் அடைந் துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புக் குழுவினர் செல்ல சிரமப்படுகின்றனர். கனமழையிலும் வெள்ள பெருக்கிலும் சிக்கி குறைந்தது 25 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த முப்பது ஆண்டுகளில் ஜனவரி மாதத்தில் இப்படியொரு கனமழை பெய்ததில்லை என்று குடியிருப்பாளர்களும் அதிகாரி களும் கூறுகின்றனர். கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையால் 7 மாநிலங்களில் வசிக்கும் சுமார் 1.1 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளப்பெருக்கில் இரு பாலங்கள் சேதம் அடைந்ததைத் தொடர்ந்து அந்த வழியாகச் சென்ற அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன. படம்: ராய்ட்டர்ஸ்