சிங்கப்பூரர்களுக்குப் போதிய உறக்கமில்லை

சிங்கப்பூரர்களில் பலருக்கு தூக் கம் போதவில்லை. சுமார் 40 விழுக்காட்டினருக்குப் போதுமான உறக்க மில்லை என்று சிங்ஹெல்த் பலதுறை மருந்த கங்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆய்வில் பங்கேற்ற பத்தில் ஆறு சீனர்கள் போதுமான அளவு தூங்குகின்றனர். அதே சமயத்தில் மலாய், இந்தியர்களில் 40 விழுக்காட்டினர் மட்டுமே போதுமான அளவு உறங்குகின்றனர். கடந்த ஆண்டு 2015ல் பிப்ரவரி முதல் ஜூன் வரையில் 350 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. செங்காங், புக்கிட் மேரா ஆகிய இரு பலதுறை மருந்தகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஏழு மணி நேரத்துக்கும் குறைவாக உறங்குவது போதுமான தூக்கமில்லை என்று கருதப் படுகிறது. இதனால் உடலின் எதிர்ப்பு சக்தி, ஞாபக சக்தி குறைந்து அன்றாடப் பணிகள் பாதிக்கப்படுகின்றன. ஆய்வில் தூக்கத்தைப் பாதிக் கும் அம்சங்களும் ஆராயப்பட்டன.

வார நாட்களில் படுக்கை அறையில் மடி கணினி அல்லது கணினியைப் பயன்படுத்துபவர்கள், வீடியோ விளையாட்டு களில் ஈடுபடுபவர்கள் பொதுவாக தூக்கத்தைத் தொலைத்துவிடுகின்றனர். இருந்தாலும் படுக்கையில் கைபேசி பயன்படுத்துபவர்களில் பெரும்பாலோர் வார இறுதியில் போதுமான அளவு தூங்குகின்ற னர். ஆய்வின் ஆசிரியர்களில் ஒருவரான டாக்டர் டான் ஙியாப் சுவான், தூக்கமின்மையால் அவதிப்படும் நோயாளிகளுக்கு ஆய்வில் அடையாளம் காணப்பட்ட அம்சங்கள் உதவும் என்றார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!