சிலேத்தார் விரைவுச்சாலையில் நேற்று சிறிய லாரி ஒன்று, மற்றொரு லாரி மீது மோதியதில் ஒன்பது பேர் காயம் அடைந்தனர். உட்லண்ட்ஸ் அவென்யூ 12க்கு அருகே சிலேத்தார் விரைவுச் சாலைக்குள் நுழையும் பாதையில் நேற்றுக் காலை 7.10 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்தது என்று லியான்ஹ வான்பாவ் வெளியிட்ட செய்தி குறிப்பிட்டது. இதில் சிறிய லாரியில் பயணம் செய்த 8 வெளி நாட்டு ஊழியர்களும் காயம் அடைந்தனர். ஓட்டுநருக்கு சிறிய அளவில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. சம்பவத்தின்போது பெரிய லாரி சாலையோரம் நிறுத்தி வைக் கப்பட்டிருந்ததாக நம்பப்படுகிறது. தகவல் கிடைத்து அங்கு வந்த குடிமைத் தற்காப்புப் படையினர் லாரியில் சிக்கிய ஒருவரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். காயம் அடைந்த ஒன்பது பேரும் கூ டெக் புவாட் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். சிலேத்தார் விரைவுச்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டதாக நம்பப்படும் பெரிய லாரி மீது சிறிய லாரி மோதியது.
சிலேத்தார் விரைவுச்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டதாக நம்பப்படும் பெரிய லாரி மீது சிறிய லாரி மோதியது. படம்: வான்பாவ்