மோசமான விமான சேவை: ஏர் இந்தியாவுக்கு மூன்றாமிடம்

மோசமான விமான சேவை வழங் கும் விமானப் போக்குவரத்து நிறுவனங்களில் 'ஏர் இந்தியா' மூன்றாமிடம் பிடித்துள்ளது. 'ஃப்ளைட்ஸ்டேட்ஸ்' எனும் நிறுவனம் ஆண்டுதோறும் சிறப் பாகச் செயல்படும் மற்றும் மோச மாகச் செயல்படும் விமான சேவை நிறுவனங்களின் பட்டி யலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், நெதர்லாந் தின் கேஎல்எம் நிறுவனம் கடந்த ஆண்டுக்கான உலகின் சிறந்த விமான சேவையாகத் தேர்வு பெற்றுள்ளது. ஸ்பெயினின் 'ஐபீரியா', ஜப்பானின் 'ஜேஏஎல்' ஆகியவை அடுத்த இரு இடங் களைப் பிடித்தன.

சிங்கப்பூர் ஏர் லைன்சுக்கு ஏழாமிடம் கிட்டியது. இஸ்ரேலின் 'எல் அல்' நிறுவனம் 2016ஆம் ஆண்டில் மிக மோசமாகச் செயல்பட்ட விமானப் போக்குவரத்து நிறு வனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் இடத்தை 'ஐஸ்லாந்து ஏர்' நிறுவனமும் மூன்றாமிடத்தை 'ஏர் இந்தியா' நிறுவனமும் பிடித்தன. விமான சேவையில் ஏற்படும் காலதாமதம், விமானங்கள் ரத்து செய்யப்படுவது உள்ளிட்ட பல காரணிகளின் அடிப்படையில் இப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

இந்நிலையில், 'ஃப்ளைட் ஸ்டேட்ஸ்' அறிக்கை உண்மைக் குப் புறம்பானது எனக் கூறி, அதை ஏற்க மறுத்துள்ளது 'ஏர் இந்தியா' நிறுவனம். "அந்த அறிக்கை இட்டுக்கட் டப்பட்டதுபோல் தெரிகிறது. ஆகையால், அந்த அறிக்கை குறித்து ஏர் இந்தியா நிர்வாகம் விசாரிக்கும்," என்று அதன் பேச்சாளர் தனஞ்சய் குமார் தெரி வித்துள்ளார். அதே நேரத்தில், மலிவுக் கட்டண விமான சேவை நிறு வனமான 'இண்டிகோ', ஆசிய பசிபிக் வட்டாரத்தைப் பொறுத்த மட்டில், குறித்த நேரத்தில் விமான சேவைகளை இயக்கும் நிறுவனங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!