‘ரஷ்யா மீதான குற்றச்சாட்டு வெறும் கட்டுக்கதை’

மாஸ்கோ: அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவுள்ள திரு டோனல்ட் டிரம்ப் பற்றிய தவறான தகவல்களை ரஷ்ய உளவு அமைப்புகள் வைத்துள்ளதாகக் கூறப்படுவதை ரஷ்யா மறுத் துள்ளது. அத்தகைய குற்றச்சாட்டு வெறும் கட்டுக்கதை என்றும் டிரம்ப்புடனான நல்ல உறவை கெடுக்கும் முயற்சி அது என்பது தெளிவாகத் தெரிகிறது என்றும் ரஷ்ய அதிபர் மாளிகையின் பேச்சாளர் கூறியுள்ளார். திரு டிரம்பின் பெயருக்கு களங்கத்தை விளைவுக்கும் தகவல்களை ரஷ்யா வைத்துள்ள தாக உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டுகள் கூறுகின்றன. அத்தகவலை திரு டிரம்ப்பும் கடுமையாகச் சாடியுள்ளார். "அது பொய்யான தகவல்," என்று திரு டிரம்ப் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இம்மாதம் 20ஆம் தேதி திரு டிரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!