தடைகளைக் கடந்து பெற்ற வெற்றி

உயர்நிலை இரண்டு ஆண்டிறுதி பள்ளி விடுமுறைக்காக இந்தியா சென்றிருந்தபோது, யூசோஃப் இஷாக் உயர்நிலைப் பள்ளி மாணவி நவ்ஸின் நிஸார் விபத்து ஒன்றில் சிக்கிக் கொண்டார். அப்போது மோட்டார் சைக்கிளின் பின்னிருக்கையில் அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்த அவருடைய ஒரு கால் எலும்பின் பல இடங்களில் முறிவு ஏற்பட்டது. இந்தியாவில் சிகிச்சை பெற்று சிங்கப்பூர் திரும்பிய நவ்ஸின், உயர்நிலை மூன்றாம் வகுப்பில் பயின்றபோது, அறுவை சிகிச்சைக் காக இந்தியாவிற்கு சென்றுவர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஒரு மாதம் அவரால் பள்ளிக்கும் செல்ல முடியவில்லை. பள்ளியின் பூப்பந்து அணியில் இடம் பெற்றிருந்த நவ்ஸின் இயல்பாகவே விளையாட்டில் மிகுந்த நாட்டம் கொண்ட ஒரு மாணவி. பூப்பந்தாட்டம் தவிர இதர விளையாட்டுகளிலும் ஈடுபட்டு வந்த நவ்ஸின் விபத் துக்குப் பிறகு விளையாட்டிலிருந்து ஒதுங்கியிருக்க வேண்டியிருந்தது. அவருடைய காலில் ஏற்பட்ட பலத்த காயங்களால், அவரால் ஓர் ஆண்டுக்குப் பள்ளியில் பூப்பந் தாடவோ, உடற்பயிற்சி வகுப்பு களில் ஈடுபடவோ இயலாமல் போனது.

"என் தோழிகள் உடற்பயிற்சி வகுப்புக்குச் செல்லும்போது என்னால் கலந்துகொள்ள முடிய வில்லையே என்று சோகமாக இருக்கும்," என்று நஸ்வின் கூறினார். அவரால் பள்ளிப் பாடங்களிலும் முழுக் கவனம் செலுத்த முடியாமல் போனது. இதனால், அவரது மதிப் பெண்களும் பாதிப்படைந்தன. உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அதிக பாதிப்புக்கு உள்ளான நவ்ஸினுக்கு அவரது பள்ளி ஆசிரியர்கள், சக மாணவர்கள், பெற்றோர் ஆகியோர் உறுதுணையாக இருந்து உதவியும் ஊக்கமும் அளித்தனர். படிகள் ஏற முடியாததால் நஸ்வினின் வகுப்பையே முதல் மாடிக்கு அவரது பள்ளி நிர்வாகம் மாற்றியது. "எனக்கு உதவி தேவைப்பட்ட போது, என்னுடைய நண்பர்கள் வகுப்பு முடிந்து என்னுடன் இருந்து எனக்காக உதவி செய்துவிட்டுதான் அடுத்த வகுப்பிற்கு செல்வார்கள்," என்று கூறினார் நவ்ஸின்.

"உயர்நிலை நான்கில் சிறப்பாக செய்ய எனது அறிவியல் ஆசிரியரும் தமிழாசிரியரும் எனக்கு நிறைய ஊக்கமளித்தனர். தேர்வு காலத்தின் போது இருவருமே எனக்கு வகுப்பு நேரம் தவிர்த்து, கூடுதல் பாடங்களை நடத்தினர்," என்றார் அவர்.

தமது வகுப்பு ஆசிரியரிடமிருந்து 'ஒ' நிலைத் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்ளும் யூசோஃப் இஷாக் உயர்நிலைப் பள்ளி மாணவி நவ்ஸின் நிஸார். படம்: திமத்தி டேவிட்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!