வாழும் சூழலுக்கான திட்டங்களுக்கு $6மி.

டிஎஃப் எகோஸ்பெரிட்டி என்று அழைக்கப்படும் தெமாசெக் அறநிறுவனம் நான்கு திட்டங் களுக்காக ஆறு மில்லியன் வெள்ளியை ஒதுக்கி இருப்பதாக நேற்று தெரிவித்தது. ஸிக்கா கிருமித் தொற்று போன்ற நோய் பரவலை விரைந்து சமாளிப்பது அந்தத் திட்டங்களுள் முதன்மை யானது. ஸிக்கா கிருமிக்கு எதிராக சிகிச்சை அளிக்க விரைவான செயல்திறனை உருவாக்குவது அதன் குறிக்கோள்.

கொசுப் பெருக்கக் கட்டுப்பாடு மற்றொரு திட்டம். கொசுக்களை பிறவியிலேயே ஒழிக்கும் நோக்கில் இப்போதிருப்பதற்கு மாற்றான பூச்சிக்கொல்லி,வளர்ச்சியடைந்த கொசுக்களுக்கு எதிரான கொசுத் துரத்தி, காற்றில் கரையும் எண்ணெய் போன்றவற்றை உருவாக்குவது திட்டம். மூன்றாவது திட்டம் மூன்று முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகளுக்கான புதிய விவேக முகத்திரையை வடிவமைப்பது. நடப்பில் இருக்கும் முகத்திரைகள் பெரியவர்களுக்கும் ஏழு வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் பொருந்தக் கூடியது.

பொது இடங்களில் காற்றை வடிகட்டும் விவேகக் குளிரூட்டியை உருவாக்குவது. உள்ளூரிலேயே தயாரிக்கப்படவுள்ள இந்த விவேகக் குளிரூட்டிகள் சிங்கப்பூர் விலங்கியல் தோட்டம் உள்ளிட்ட பல பொது இடங்களில் செயல்படுத்தப்படும். தெமாசெக் கொடைப்பிரிவின் கீழான இந்த லாபநோக்கற்ற நிறுவனமான டிஎஃப் எகோஸ்பெரிட்டி முதன் முதலாக ஆதரவு வழங்கும் திட்டங்கள் இவை என்று நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!