அதிர்ச்சியில் வடிவேலு வடிவேலுவின் நகைச்சுவை

உச்ச நிலையில் இருந்தபோது அரசியலில் மூக்கை நுழைத்துச் சில ஆண்டுகள் திரையுலகைவிட்டே விலகியிருந்தார். அதன்பிறகு இனிமேல் நடித்தால் கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என்று சொல்லி இரண்டு படங்களில் நடித்தார். ஆனால் அந்தப் படங்கள் அவருக்கு வெற்றியைக் கொடுக்கவில்லை. அதனால் 'கத்திச்சண்டை' படம் மூலம் மறுபடியும் நகைச்சுவை நடிகராக மறுபிரவேசம் செய்தார் வடிவேலு. அந்தப் படத்தில் மற்றொரு நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் சூரி நடிக்கிறார் என்று தெரிந்தும் நடித்தார்.

ஆனால் அந்தப் படத்தில் தன்னுடைய நகைச்சுவையை விட சூரியின் நகைச்சுவை ரசிகர்களைக் கவர்ந்தது என்பதை அறிந்து பெரும் அதிர்ச்சியில் இருக்கிறார் வடிவேலு. இனி எந்தப் படத்திலும் மற்றொரு நகைச்சுவை நடிகரோடு நடிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் வடிவேலு. அத்துடன் தனது நடிப்பை உச்சத்திற்குக் கொண்டு செல்லும் நோக்கில் நகைச்சுவை சகாக்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளாராம் வடிவேலு.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!