லிட்டில் இந்தியாவின் பொங்கல் திருநாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நேற்று சூரிய பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஹேஸ்டிங்ஸ் ரோட்டில் அமைக் கப்பட்டுள்ள பொங்கல் கிராமத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் ஸ்ரீநாரா யண இல்லம், பிலாங்கி வில்லேஜ் மிராண்டி இல்லம் ஆகியவற்றைச் சேர்ந்த சுமார் 30 குடியிருப் பாளர்கள் கலந்துகொண்டனர். தஞ்சோங் பகார் குழுத் தொகு நாடாளுமன்ற உறுப்பினர் மெல் வின் யோங் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அவருடன் சமூகத் தலைவர்களும் சுற்றுப்பயணி களும் ஒன்றுகூடிய வேளையில் சூரிய பொங்கல் வைக்கப்பட்டது. பால் பொங்கி வழியும் தருணத்தில் அங்கு திரண்டிருந்த அனைவரும் 'பொங்கலோ பொங்கல்' என்று ஆனந்த முழக்கமிட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த 30 குடியிருப்பாளர் களுக்கும் திரு மெல்வின் யோங் அன்பளிப்புப் பைகளை வழங்கி னார். $30 உதவித் தொகையும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இவ்விழாவில் பங்கேற்றது தமக்கு எல்லையற்ற மகிழ்ச்சியைத் தந்த தாக தமிழ் முரசிடம் கூறினார் ஸ்ரீநாராயண மிஷன் இல்லத்தில் தங்கி இருக்கும் நாகையா ரங்க சாமி, 87. பிரதமரின் பொங்கல் வாழ்த்து பிரதமர் லீ சியன் லூங் 'பொங் கலோ பொங்கல்' என்று தமிழில் தலைப்பிட்டு ஃபேஸ்புக்கில் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள் ளார். அந்த வாழ்த்தில், "பொங்கல் திருநாளைக் கொண்டாடும் அனை வருக்கும் வாழ்த்துகள். சிறப்பான தை மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் தமிழர்களின் அறு வடைத் திருநாள் பொங்கல். அரிசி, வெல்லம், பால் ஆகியன கலந்து பொங்கல் சமைக்கும்போது பொங்கி வருவது சிறப்பைக் குறிக்கும். கடந்த ஆண்டு அதனைக் கற்றுக் கொண்டேன். அது எளிதானது. "பல இன சிங்கப்பூரில் கொண் டாடப்படும் அழகான திருவிழாக் களில் ஒன்று பொங்கல். இதற்காக லிட்டில் இந்தியா வட்டாரத்தில் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விளக்கொளியில் மின்னும் அந்த வட்டாரத்திற்குச் சென்று பொங் கல் சமைப்பதை நாம் ஏன் காணக் கூடாது," என்று திரு லீ கூறினார்.
ஹேஸ்டிங்ஸ் ரோட்டில் நடைபெற்ற சூரிய பொங்கல் நிகழ்ச்சியில் 'பொங்கலோ பொங்கல்' என்னும் குதூகல முழக்கத்துடன் பொங்கல் வைக்கப்பட்டது. தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மெல்வின் யோங் (மாலையுடன்) சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் சமூகத் தலைவர்களும் லிஷா பிரமுகர்களும் பொதுமக்களும் திரளாகக் கலந்துகொண்டனர். படமும் செய்தியும்: திமத்தி டேவிட்