‘சிங்கப்பூர் எல்லைப் பாதுகாப்பில் கவனம்’

சிங்கப்பூர் தனது எல்லைப் பகுதிகளைப் பாதுகாப்பாக வைத்திருப் பதில் கவனம் செலுத்தி வருவதா கவும் மற்ற நாட்டுக் குடிமக்களைக் கண்காணிப்பதில்லை என்றும் சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் கூறியிருக்கிறார். கடந்த செவ்வாய்க்கிழமை உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி யிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட எட்டு இந்தோனீசியர்கள் அந்நாட் டால் கைது செய்யப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து, இத்தகையவர் களை சிங்கப்பூர் தொடர்ந்து கண் காணிக்குமா என்று செய்தியாளர் கள் கேட்க, அமைச்சர் சண்முகம் மேற்கண்டவாறு பதிலளித்தார். "இந்தோனீசியாவில் நடப்பதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது.

மற்ற நாடுகளுக்குச் சென்று, அங்குள்ளவர்களை நாம் கண் காணிப்பதும் இல்லை. அது அந் தந்த நாடுகளின் வேலை. நாங்கள் சிங்கப்பூரின் எல்லைப்பகுதிகள் குறித்தே அக்கறை கொண்டுள் ளோம். ஒருவரால் பிரச்சினை ஏற்படலாம் எனக் கருதினால் அல்லது பயங்கரவாதம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவரை நாங்கள் கைது செய்வோம். இந்த விவகாரத்தில், குடிநுழைவு, சோதனைச் சாவடி அதிகாரிகள் திறம்படச் செயல்பட்டு, அந்த எட்டு இந்தோனீசியர்களையும் சிங்கப்பூருக்குள் நுழையவிடாமல் தடுத்தனர்," என்றார் திரு சண்முகம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!