திரிஷாவின் ‘கர்ஜனை’ படப்பிடிப்பு ரத்து

திரிஷாவின் 'கர்ஜனை' படப்பிடிப்பு ரத்து தற்­பொ­ழுது கதா­நா­ய­கிக்கு முக்­கி­யத்­து­வம் உள்ள படங்க­ளா­கத் தேர்ந்­தெ­டுத்து நடித்து வரு­கிறார். அந்த வரிசை­யில் தற்­பொ­ழுது 'மோகினி', 'கர்ஜனை' ஆகிய படங்களில் நடித்து வரு­கிறார். ­­­ஜல்­லிக்­கட்டு விவ­கா­ரம் தமி­ழ­கத்­தில் பூதா­க­ர­மாக வெடித்­துள்ள நிலையில் அதற்­குத் தடை கோரும் 'பீட்டா' அமைப்­பின் தூதராக திரிஷா இருப்­ப­தால் அவரை வைத்துப் படம் தயா­ரித்­தி­ருப்­ப­வர்­கள் அச்­சத்­தில் இருக்கிறார்கள். காரணம் 'பீட்டா' அமைப்­புக்கு எதிராக இதுவரை இல்லாத அள­வுக்கு இப்போது தமி­ழ­கத் ­தில் எதிர்ப்பு வலுத்­துள்­ளது. அதனால்­தான் திரிஷா நடித்து வரும் 'கர்­ஜனை' படப்­பி­டிப்­பு­ த­ளம் வரை சென்று ஜல்­லிக்­கட்டு ஆத­ர­வா­ளர்­கள் எதிர்ப்­புத் தெரி­வித்து படப்பிடிப்பை நிறுத்தி இருக்கின்றனர். மேலும் இந்த எதிர்ப்பை இதோடு விட்­டு­வி­டக்­கூ­டாது.

திரிஷா நடித்த படங்கள் வெளி­யா­கும்­போது எதிர்ப்­புத் தெரி­விக்கவேண்டும் என்று ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் திட்­ட­மிட்­டுள்­ளார்­க­ளாம். அதனால் திரிஷாவை கதையின் நாய­கி­யாக வைத்துப் படம் தயா­ரிப்­ப­வர்­கள் அதிர்ச்­சி­யடைந்­துள்­ள­னர். அதோடு இதுவரை இந்த மாதிரி மிரட்­டல்­களுக்­குக் கலங்காத திரி­ஷா­வும் இந்தப் பிரச்­சினை­யினால் தனது திரை­யு­லக வாழ்க்கை சரிந்து விடுமோ என்ற கலக்கத்தில் இருக்கிறார். இந்த நிலையில் ஆழ்ந்த இரங்கல் என்று அவரது புகைப்­ப­டத்­து­டன் சுவ­ரொட்டி ஒன்று சமூக ஊட­கங்களில் அதி­வே­க­மா­கப் பரவி வரு­கிறது. அதில் திரிஷா 'எய்ட்ஸ்' நோயால் பாதிக்­கப்­பட்டு 12.01.2017 அன்று உயி­ரி­ழந்­து­விட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இப்­ப­டிக்கு என்ற இடத்­தில் அப்பா=அம்மா என்று அச்­சி­டப்­பட்­டி­ருப்­பது தற்­பொ­ழுது இணை­யத்­தில் பெரும் பர­ப­ரப்பை ஏற்­படுத்­தி­யுள்­ளது. இதனால் மனம் உடைந்த திரிஷா இணை­யத்­தில், "தான் ஒரு­போ­தும் ஜல்லிக்கட்டுக்கு எதிராகப் பேசியதே இல்லை. என்னை இறந்­து­விட்­ட­தாக சித்­தி­ரித்து என் குடும்பத்தை­யும் தரக்­குறை­வாகப் பேசியது என்னை அதிர்ச்சி அடையச் செய்திருக்கிறது," என்று குறிப்­பிட்­டி­ருக்­கிறார். இதற்­கிடை­யில்­­­ தமிழ்த் திரை­யு­ல­கின் மூத்த நடிகையும் இயக்கு நருமான ஸ்ரீ பிரியா ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருக்கிறார். "தமிழா எழுந்து­கொள்! ஜல்­லிக்­கட்டை நடத்து, ஜல் ஜல் ஜல் என சலங்கை ஒலி­யு­டன் வாருங்கள் காளைகளே!" என்று இணை­யத்­தில் பதி­விட்­டி­ருக்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!