'பைரவா' படம் ஜனவரி 12ல் பிரம்மாண்டமாக திரைக்கு வந்தது. இப்படம் முதல் நாள் 'வேதாளம்' சாதனையை முறியடித்ததாகக் கூறினார்கள். ஆனால் அப்படி ஏதும் இல்லை என அதிகாரபூர்வ தகவலே வந்துவிட்டது. இந்நிலையில் இந்தப் படம் முதல் நாள் ரூ.12 கோடி வசூல் ஆனதாம். இரண்டாம் நாளின் வசூல் பெரும் அடிவாங்கியுள்ளதாம். இருந்தாலும் 4 நாட்கள் விடுமுறை என்பதால் வசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட 35 விழுக்காட்டு வசூல் குறைந்துவிட்டதாம். அதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்களாம். காரணம் 'பைரவா' பெரும் அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அளவிற்கு படத்தில் விஷயம் இல்லை என்று கூறுகிறது கோலிவுட்.
படத்தின் நீளம்தான் இதற்குக் காரணம் என்கின்றனர். இதை எப்படியோ அறிந்துகொண்ட படக்குழுவினர், படத்தின் நீளத்தை 7 நிமிடம் குறைக்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.