சைக்கிள் சின்னம் பற்றிய முடிவு நாளை அறிவிப்பு

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாடி கட்சியில் பிளவு ஏற்பட்டு முதல்வர் அகிலேஷ் யாதவும் அவரது தந்தை முலாயம் சிங் யாதவும் எதிரெதிர் அணியில் உள்ளனர். இந்த நிலையில் கட்சிக்குச் சொந்தமான சைக்கிள் சின்னத்தைக் கைப்பற்ற இரு தரப் பினரும் முயற்சி செய்து வரு கின்றனர். இதற்கிடையே இது குறித்து விசாரித்த தேர்தல் ஆணையம் சின்னம் யாருக்கு ஒதுக்கப்படும் என்பது பற்றி நாளை அறிவிக் கப்படும் என்று கூறியுள்ளது. இந்தியாவின் ஆகப் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் குடும்பச்சண்டை விசுவரூபம் எடுத்ததால் ஆளும் சமாஜ்வாடி கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது.

கட்சியின் நிறுவனர் முலாயம் சிங்குக்கு அவரது தம்பி சிவபால் சிங் வலது கரமாக இருக்கிறார். ஆனால் முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவுக்கு சிவபால் சிங் எதிரியாக விளங்கு கிறார். அதே சமயத்தில் அகிலேஷ் யாதவுக்கு முலாயம் சிங்கின் மற்றொரு தம்பி ராம் கோபால் யாதவ் பக்க பலமாக இருந்து வருகிறார். இந்த நிலையில் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்திற்கு பிப்ரவரி 11ஆம் தேதி தொடங்கி மார்ச் 8ஆம் தேதி வரை ஏழு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. சமாஜ்வாடி கட்சியில் பிளவு ஏற்பட்டு கட்சியின் நிறுவனரான முலாயம் சிங் தரப்பும் அவரது மகனான முதல்வர் அகிலேஷ் யாதவ் தரப்பும் தேர்தல் சின்னமான சைக்கிள் சின்னத்துக்கு உரிமை கோருகின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!