‘ஏர் இந்தியா’வில் ரூ. 225 கோடி ஊழல்

புதுடெல்லி: 'ஏர் இந்தியா' விமான நிறுவனத்தில் ரூ. 225 கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. கடந்த 2011ல் கணினி மென்பொருள் வாங்கியதில் அந்த ஊழவ் நடந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் தொடர்பில் ஏர் இந்தியா தலைமை கண்காணிப்பு அதிகாரி அளித்த அறிக்கைகளை மத்திய கண்காணிப்பு ஆணை யம் பரிசீலித்தது. அதையடுத்து சிபிஐ விசாரணைக்கு உத்தர விட்டது. சிபிஐ மேற்கொண்ட நடவடிக்கையில் வழக்குப் பதிவு செய்வதற்கான அடிப்படை முகாந்திரம் இருப்பதைக் கண் டறிந்தது.

இதனால் ஏர் இந்தியா, ஜெர்மனி நிறுவனமான எஸ்ஏபி ஏஜி, அனைத்துலக நிறுவனமான ஐபிஎம் ஆகியவற்றின் பெயர் குறிப்பிடாத அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இது குறித்து தகவல் தெரி வித்த சிபிஐ, "மென்பொரு ளுக்குப் பணம் செலுத்தப் பட்டதிலும் சேவைகள் வழங்கப் பட்டதிலும் பல முறைகேடுகள் நடந்துள்ளன என்று கூறியது. இதனால் அந்த நிறுவனத்தின்மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம்'' என்று அது கூறியது. இதற்கிடையே 'ஏர் இந்தியா' தலைவர் அஷ்வானி லோஹானி, இந்த விசாரணைகள் நிறு வனத்தை மிகவும் பாதிக்கும் என்று கூறியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!